Friday, May 11, 2012

ரசித்ததில் ருசித்தவை - என்னுள்ளே என்னுள்ளே

பாடல்கள் பலவிதம்.  சில பாடல்கள் கேட்ட உடனே பிடிக்கும்; ஆனால் போகப் போகப் பிடிக்காது.  சில பாடல்கள் முதலில் பிடிக்காது.  ஆனால் போகப் போக ரொம்ப பிடிக்கும். சில பாடல்களைக் காட்சியோடு சேர்ந்து பார்த்தால் பிடிக்கும், சிலவற்றை காதால் கேட்டால் மட்டுமே பிடிக்கும்.

ஆனால் சில பாடல்கள் மட்டும்தான் கேட்ட முதல் வினாடியில் இருந்து அப்படியே உள்ளே போய் உயிரில் கலந்து விடும்.   எல்லா பாடல்களுக்கும் இது சாத்தியம் இல்லை.  குறிப்பாக இசை, குரல், பாடல் என எல்லாமே சேர்ந்து இசையும் இசை வெள்ளம் மட்டும்தான் ஏதோ ஒரு அறியாத காரணத்தினால் கண் சொருக வைக்கும்.

வள்ளி படத்தில் வரும் என்னுள்ளே பாடல் மேற்சொன்ன வகை.  இசையால் நம்மை அடிமை கொள்ள வைப்பது இசைஞானியின் தனிச் சொத்து.  அதனால் பெரிய ஆச்சரியம் இல்லை.  கவிஞர் வாலிக்கும் இப்படி கேட்டவுடன் மறக்க முடியாத பாடல்கள் தருவது முதன் முறை அல்ல.  ஆனால் இந்த பாடல் இன்னொரு இறவா வரம் பெற்றவரின் திறமைக்குச் சான்று.  அது பின்னணிப் பாடகி சுவர்ணலதா.  சாதாரணமாகப் பேசும் போது இயல்பாக இருக்கும் இவரது குரல் பாடும் போது மட்டும் எப்படி ஐஸ்கிரீம் தடவியது போல் ஆகிறது என்பது யாரும் அறியா ரகசியம்.

இந்தப் பாடலைப் பொறுத்தவரை அனைவரும் பாடி விட முடியாது.   தாபம், தாகம், ஏக்கம், மோகம் என அனைத்தும் குரல் வழி இசையோடு வரிகளோடு இணைந்ததால் மட்டுமே இதன் வெற்றி சாத்தியப் பட்டது.

கடவுள் என்னும் கொடூரன் இந்தக் குயிலை தான் மட்டுமே பாடச் சொல்லி கேட்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே  இப்பொழுதே அழைத்துக் கொண்டானோ?

இப்போது பாடலைப் பாருங்கள்.




3 comments:

shanshaj2004 said...

correct ,,,nalla thiramaiyana padaki ,,aandavaar seekaram kondu sendru vitaar :(

Jay said...

அண்ணாச்சி இளையராஜா இரசிகர் என்பதை அடியேன் அறிவேன். நிச்சயமாக இந்தப்பாடல் ஒரு அருமையான மனதை வருடிச் செல்லும் பாடல். மேலும் பல பாடல்களை பகிருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

இராஜராஜேஸ்வரி said...

அருமையான பாடல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..