Tuesday, May 09, 2006

அடுத்து ஜெ. ஆட்சி - கா.நா கருத்துக் கணிப்பு

ஜெயா டிவியில் அடுத்த அதிரடி.

யாரு கா.நா. னு கேக்குற அறிவு "சீவி"களுக்கு - கா.நா. என்றால் காழியூர் நாராயணன் - இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாம் சொல்லும் பெரிய தில்லாலங்கடி ஜோதிடர்.

எக்சிட் போல்கள் எல்லாம் இதுவரை தவறான தகவல்கள் மட்டுமே தந்திருக்கின்றன என்று செய்தியில் ஆணித்தரமாகச் சொன்னார்கள். அது பரவாயில்லை - ஏனென்றால் எக்சிட் போல்கள் மண்ணைக் கவ்வியதும் உண்டு. ஆனால் அடுத்து போட்டாங்க பாருங்க அதிரடி! பிரபல ஜோதிடர்கள் அடுத்துத் தமிழகத்தில் அதிமுக ஆட்சிதான் அமையும் அப்படின்னு சொல்லிருக்காங்களாம். அதுனால அதிமுக ஆட்சிதான் அமையுமாம்.

மக்கள் என்ன சொன்னாங்களோ அதைப் பத்தி கவலை இல்லை. ஜோதிடர்கள் சொல்லிட்டாங்களாம், இதுக்கு முன்னாடி ஜோதிடர்கள் சொன்னதைக் கேட்டுத்தானே முதுமலைக்கு யானையை அனுப்பினது, யானைக்குட்டியைக் கோயிலுக்குக் குடுத்தது, சத்ரு சம்ஹாரம் யாகம் செய்ய தமிழ்நாடு முழுவதிலுமிருந்து ஐந்து ரூபாய்க் காசுகளைத் திரட்டியது எல்லாமே செஞ்சும் நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்தது ஆப்பு!

சொல்றதுக்கு வேற பத்திரிகைச் செய்தியே இல்லையா என்ன? தினமலர், தினமணி, தினபூமி இதெல்லாம் விட்டு எக்சிட் போல் நடத்தி அதிமுக 233 தொகுதிகளில் வெற்றி பெறும் - முறைகேடுகளால் கருணாநிதி மட்டும் வெல்வார்னு சொல்ல வேண்டியதுதானே!


உங்களுக்காகக் காழியூர் நாராயணன் கொடுத்த ஆறுதல் பேட்டி!

காழியூர் நாராயணன் பேட்டி
தமிழ்நாட்டில் முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா தலைமையில் மீண்டும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி மலரும் என்று பிரபல ஜோதிடர் திரு.காழியூர் நாராயணன் கூறியுள்ளார்.
எதிர்காலத்தை கணித்து சொல்லும் ஜோதிடர்களில் திரு.காழியூர் நாராயணன் குறிப்பிடத்தக்கவர். தேர்தல் முடிவுகள் குறித்து பேட்டியளித்துள்ள திரு.காழியூர் நாராயணன், தமிழகத்தில் முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா தலைமையில் மீண்டும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்று உறுதிபடத் தெரிவித்தார். செல்வி.ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சர் பொறுப்பேற்பார் என்று ஈரோட்டை சேர்ந்த பிரபல ஜோதிடர் திரு.ஓம்.உலகநாதனும் கூறியுள்ளார். பிரபல ஜோதிடர் பண்டிட் வெற்றிவேலுவும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. கூட்டணியே வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள பிரபல ஜோதிடர்கள் பலரும் செல்வி.ஜெயலலிதாவே மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று ஏற்கனவே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.



Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு திரட்டப்படுகிறது

8 comments:

ramachandranusha(உஷா) said...

எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக் கொள்ளுங்கள். இந்தம்மா தோற்றுவிட்டால், அத்தனை ஜோசியக்
காரர்களையும் வெரட்டி விட்டுடுவார். இனி வரும் காலத்தில் எதுக்கு ஜோசியம் பார்க்க மாட்டார் :-)

ஒரு வேளை ஜெயித்துவிட்டால், நினைத்தாலே பயமாய் இருக்கு

பிரதீப் said...

நன்றி உஷா உங்கள் கருத்துக்கு.

தோத்துட்டா உடனே இப்ப இருக்குற ஜோசியரைத்தான் வெரட்டுவார். அடுத்தவர் கண்டிப்பாக வருவார்.

நீங்க கவலைப் படுவதற்கான காரணங்கள் கம்மியாகுமின்னு தேர்தல் கணிப்புகள் சொல்லுது

சிவமுருகன் said...

அரசியல்ல இதெல்லாம் சகஜ(மப்பா)ங்க.

முதலில் நீங்கள் (http://espradeep.blogspot.com) மழை பிரதீப்போ என்று எண்ணி விட்டேன்.

இப்போது தான் கவனித்தேன். இன்னும் நிறைய எழுதுங்கள்.

பிரதீப் said...

மிக்க நன்றி சிவமுருகன்.
நான் சில நாட்களாகப் பின்னூட்டங்கள் இட்டுக் கொண்டிருந்தாலும் இன்னும் நிறைய பதிவுகள் எழுதுவதற்கு நேரம் வாய்க்கவில்லை.
உங்கள் வாக்கு பலிக்கட்டும்

G.Ragavan said...

// இந்தம்மா தோற்றுவிட்டால், அத்தனை ஜோசியக்
காரர்களையும் வெரட்டி விட்டுடுவார். இனி வரும் காலத்தில் எதுக்கு ஜோசியம் பார்க்க மாட்டார் :-) //

அப்படியில்ல....இருக்குறவன வெறட்டீட்டு புதுசா ஆளக் கொண்டு வருவாங்க...

// ஒரு வேளை ஜெயித்துவிட்டால், நினைத்தாலே பயமாய் இருக்கு //

என்ன வெள்ளைத் துண்டு மஞ்சளான மாதிரி....பச்சை நீலமாகலாம்...சிவப்பாகலாம்....ஆரஞ்சு நிறமாகலாம்....

G.Ragavan said...

வாங்க பிரதீப்பு...வலைப்பூவுக்கு உங்களைத் திரும்ப வரவேற்கிறேன். இங்கயும் கலக்குங்க.

இந்த வாட்டி 70% ஓட்டுப் போட்டிருக்காங்க...என்ன நெனச்சுப் போட்டாங்கன்னு தெரியல...நாளைக்கு இந்நேரம் தெளிவாத் தெரிஞ்சிரும். என்னையக் கேட்டா, ஒரு குறிப்பிட்ட கட்சிக்குன்னு இல்லாம ஒரு குறிப்பிட்ட கூட்டணிக்கு மெஜாரிட்டி குடுக்குறதுதான் நல்லதுன்னு தோணுது. கூட்டணில ஒரு கட்சி வெலகுனாலும் கோவிந்தான்னு இருக்கனும். அப்பத்தான் நல்லது.

பிரதீப் said...

நன்றி ஐயா.
கொஞ்ச நாளாக் காணாப் போயிருந்தேன்...

ஆமா 70% பேரு ஓட்டுப் போட்டிருக்காங்க... இதில தேர்தல் கமிஷன் 80% மேல ஓட்டுப் பதிவான இடத்துல எல்லாம் கவனமா ஆய்வு நடத்தச் சொல்லிருக்காம். எத்தனை கள்ள ஓட்டோ?

கூட்டணி ஆட்சி நல்லதுதான். ஆனால் எல்லாருமே மக்கள் நலத்தை விட்டு தன்னலம் மட்டுமே பேண ஆரம்பிச்சிட்டாங்கன்னு வைங்க, இன்னும் கொடுமை அது. ராமதாஸ், சிதம்பரம் எல்லாருமே ஆளுக்கொரு மந்திரி பதவி வச்சிக்கிட்டு "நீ என்னைக் கேக்காத நான் உன்னைக் கேக்க மாட்டேன்" னு கலைஞரோட சேந்தே தப்பு பண்ணினா என்ன செய்யிறது?

G.Ragavan said...

// கூட்டணி ஆட்சி நல்லதுதான். ஆனால் எல்லாருமே மக்கள் நலத்தை விட்டு தன்னலம் மட்டுமே பேண ஆரம்பிச்சிட்டாங்கன்னு வைங்க, இன்னும் கொடுமை அது. ராமதாஸ், சிதம்பரம் எல்லாருமே ஆளுக்கொரு மந்திரி பதவி வச்சிக்கிட்டு "நீ என்னைக் கேக்காத நான் உன்னைக் கேக்க மாட்டேன்" னு கலைஞரோட சேந்தே தப்பு பண்ணினா என்ன செய்யிறது? //

ஒருத்தனே உக்காந்து உக்காந்து திங்குறதுக்கு ரெண்டு மூனு பேராத் திங்கட்டுமேய்யா....