கல்லூரிக் காலங்களில் எனக்குள் இருந்த ஒரு கவிஞனின் (?) முத்துக்கள் எங்கோ தேடியபோது கிடைத்தது. கிடைத்ததை உடனே பகிர்வதுதானே தமிழனின் தனிப்பண்பு? அதற்காகவும் இது போன்ற பொக்கிஷங்களைப் பாதுகாத்து வைத்தால் பிற்கால சந்ததியினருக்கு இப்படி ஒரு தலைமுறை வாழ்ந்தது என்ற பெருமை நினைவுக்கு வரும் என்பதற்காகவும் வலைப்பூவில் ஏற்றுகிறேன். பைதிவே மேற்கண்டது pun intented :)
என்னால் இயன்ற
அளவு ஒரு அக வாழ்க்கையின் நிகழ்வுகளைக் கோர்த்து ஒரு சக்கரமாக்கி இருக்கிறேன். காதல் போன்ற
மென்மையான உணர்வுகளைக் கொச்சைப் படுத்துவது இதன் நோக்கமல்ல. என் வாழ்வில்
கண்ட ஒரு உண்மை நிகழ்வு! இந்தக் கவிதை(?!)யை கடைசி வரியிலிருந்து மீண்டும்
படித்தாலும் அதே உணர்வு வரும் என்று நினைக்கிறேன்.
காதலி ஆடினாள்
காதலன் ஆடிப்போனான்
காதலன் ஆடினான்
காதலும் சேர்ந்து கொண்டாடியது
காதல் உலகறியக் கொண்டாடியது
மணம் மனம் சேர்த்தாடியது
மனம் மணம் சேர்த்தாடியது
இரவு பகலென்று கணவன் ஆடினான்
கணவன் தினமும் ஆடினான்
கூடக் குழந்தையும் கூத்தாடியது
குழந்தை கூத்தாடியது
குடும்பப் பிணக்குகளும் கூத்தாடின
குடும்பப் பிணக்குகள் ஆடின
வாழ்க்கை வழக்குப்படி ஏறி ஆடியது
வழக்கு வீதியேறி ஆடியது
தம்பதியினர் தனித்தனியே ஆடினர்
தம்பதியினர் தனித்தனியே ஆடினர்
குழந்தை தன்னந்தனியே ஆடியது
குழந்தை தன்னந்தனியே ஆடியது
மனைவி குழந்தையோடு ஓடியாடினாள்
மனைவி குழந்தையோடு ஓடினாள்
கணவன் புதுக் காதலனாகிக் கலவியாடினான்
கணவன் புதுக் கலவி ஆடினான்
காதலி ஆடினாள்!
காதலி ஆடினாள்
காதலன் ஆடிப்போனான்
காதலன் ஆடினான்
காதலும் சேர்ந்து கொண்டாடியது
காதல் உலகறியக் கொண்டாடியது
மணம் மனம் சேர்த்தாடியது
மனம் மணம் சேர்த்தாடியது
இரவு பகலென்று கணவன் ஆடினான்
கணவன் தினமும் ஆடினான்
கூடக் குழந்தையும் கூத்தாடியது
குழந்தை கூத்தாடியது
குடும்பப் பிணக்குகளும் கூத்தாடின
குடும்பப் பிணக்குகள் ஆடின
வாழ்க்கை வழக்குப்படி ஏறி ஆடியது
வழக்கு வீதியேறி ஆடியது
தம்பதியினர் தனித்தனியே ஆடினர்
தம்பதியினர் தனித்தனியே ஆடினர்
குழந்தை தன்னந்தனியே ஆடியது
குழந்தை தன்னந்தனியே ஆடியது
மனைவி குழந்தையோடு ஓடியாடினாள்
மனைவி குழந்தையோடு ஓடினாள்
கணவன் புதுக் காதலனாகிக் கலவியாடினான்
கணவன் புதுக் கலவி ஆடினான்
காதலி ஆடினாள்!